Tamil Bible (Union Version)
சங்கீதம் 93
1கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், மகத்துவத்தை அணிந்து கொண்டிருக்கிறார்; கர்த்தர் பராக்கிரமத்தை அணிந்து, அவர் அதைக் கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்; ஆதலால் பூச்சக்கரம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது. 2உமது சிங்காசனம் பூர்வமுதல் உறுதியானது; நீர் அநாதியாயிருக்கிறீர். 3கர்த்தாவே, நதிகள் எழும்பின; நதிகள் இரைச்சலிட்டு எழும்பின; நதிகள் அலைதிரண்டு எழும்பின. 4திரளான தண்ணீர்களின் இரைச்சலைப்பார்க்கிலும், சழுத்திரத்தின் வலுமையான அலைகளைப்பார்க்கிலும், கர்த்தர் உன்னதத்திலே வல்லமையுள்ளவர். 5உமது சாட்சிகள் மிகவும் உண்மையுள்ளவைகள்; கர்த்தாவே, பரிசுத்தமானது நித்தியநாளாக உமது ஆலயத்தின் அலங்காரமாயிருக்கிறது.
This chapter is not in this version.
Tamil Bible (Union Version). Tamil Bible Unicode: Word of God Ministries (wordofgod.in).