46While he yet talked to the people, behold, his mother and his brethren stood without, desiring to speak with him. 47Then one said unto him, Behold, thy mother and thy brethren stand without, desiring to speak with thee. 48But he answered and said unto him that told him, Who is my mother? and who are my brethren? 49And he stretched forth his hand toward his disciples, and said, Behold my mother and my brethren! 50For whosoever shall do the will of my Father which is in heaven, the same is my brother, and sister, and mother.
Life of Jesus · 76 of 250 · The ministry
Jesus describes his true family
Told by 3 of the 4 Gospels
Matthew 12:46-50
Mark 3:31-35
31There came then his brethren and his mother, and, standing without, sent unto him, calling him. 32And the multitude sat about him, and they said unto him, Behold, thy mother and thy brethren without seek for thee. 33And he answered them, saying, Who is my mother, or my brethren? 34And he looked round about on them which sat about him, and said, Behold my mother and my brethren! 35For whosoever shall do the will of God, the same is my brother, and my sister, and mother.
Luke 8:19-21
19Then came to him his mother and his brethren, and could not come at him for the press. 20And it was told him by certain which said, Thy mother and thy brethren stand without, desiring to see thee. 21And he answered and said unto them, My mother and my brethren are these which hear the word of God, and do it.
மத்தேயு 12:46-50
46இப்படி அவர் ஜனங்களோடே பேசுகையில், அவருடைய தாயாரும் சகோதரரும் அவரிடத்தில் பேசவேண்டுமென்று வெளியே நின்றார்கள். 47அப்பொழுது, ஒருவன் அவரை நோக்கி: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மோடே பேசவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான். 48தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி, 49தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே! 50பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார்.
மாற்கு 3:31-35
31அப்பொழுது அவருடைய சகோதரரும் தாயாரும் வந்து, வெளியே நின்று, அவரை அழைக்கும்படி அவரிடத்தில் ஆள் அனுப்பினார்கள். 32அவரைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த ஜனங்கள் அவரை நோக்கி: இதோ, உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் வெளியே நின்று உம்மைத் தேடுகிறார்கள் என்றார்கள். 33அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி; 34தம்மைச் சூழ உட்காந்திருந்தவர்களைச் சுற்றிப்பார்த்து: இதோ, என் தாயும், என் சகோதரரும் இவர்களே! 35தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான் என்றார்.
லூக்கா 8:19-21
19அப்பொழுது அவருடைய தாயாரும் சகோதரரும் அவரிடத்தில் வந்தார்கள்; ஜனக்கூட்டத்தினாலே அவரண்டையில் அவர்கள் சேரக்கூடாதிருந்தது. 20அப்பொழுது: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மைப் பார்க்கவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்று அவருக்கு அறிவித்தார்கள். 21அதற்கு அவர்: தேவனுடைய வசனத்தைக் கேட்டு, அதின்படி செய்கிறவர்களே எனக்குத் தாயும் எனக்குச் சகோதரருமாயிருக்கிறார்கள் என்றார்.